We attempt to document Caste Violence in Tamilnadu.
இந்த தொகுப்பில் தமிழ் நாட்டில் நடந்த சாதிவெறியாட்டங்களும், சாதி வெறி கொலை, வன்முறைகளையும் பட்டியலிடுகிறோம்.
Yr (ஆண்டு) | இடம் | Hate Crime (சாதிவெறி வன்முறை சம்பவம் குறிப்பு) |
---|---|---|
2025 மார், 9 | திருவைகுண்டம் தூத்துக்குடி | தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகபுரம் ஊரின் தேவேந்திர ராஜ் என்ற 11ஆம் வகுப்பு மாணவனை கபடி போட்டியில் வேன்றதற்காக எதிர் அணியின சாதி வெறியர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். |
2025 பிப், 15 | மானாமதுரை அருகில் | சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சாதி வெறியால் இளைஞரின் கைகள் வெட்டப்பட்ட கொடூரம் நடந்திருப்பதாக தெரிகிறது. புல்லட் ஓட்டிய காரணத்திற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவனின் கைகளை ஒரு கும்பல் வெட்டியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சுட்டி |
2023 ஆகஸ்டு 11 | நங்குநேரி திருநெல்வேலி | "நாங்குநேரி பெருந்தெரு ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் ஆயுதங்களோடு புகுந்து, 12-ம் வகுப்பு மாணவன் சின்னதுரை, அவனின் தமக்கை சந்திரா தேவி ஆகியோர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள், சின்னதுரையுடன் படிக்கும் மாணவர்கள்தான் என்பது, இளந்தலைமுறையினர் எவ்வாறு இங்கே வளர்க்கப்படுகின்றனர் என்பதை உணர்த்துகிறது" - திருமாவளவன் சுட்டி |
2022 டிசம்பர் | வேங்கைவயல் | 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதிதான் ஆதிக்க சாதியினர் வேங்கைவயல் மக்கள் குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருந்த விவரம் அப்பகுதி மக்களுக்கு தெரிய வருகிறது சுட்டி |
2015 | நாமக்கல் அருகே | 21-வயது பொறியியல் மாணவன் கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டார் சுட்டி |
VCK Thol. Thirumavalavan denouncing violence on March 9th, 2025